K U M U D A M   N E W S

தமிழ்நாடு

என் மகனை குத்திவிட்டு உடலை கொடுத்திருக்கலாம்.. ரவுடி பன்னீர் செல்வத்தின் தாய் கதறல்

2018-ல் காணாமல் காணாமல் போன ரவுடி பன்னீர் செல்வத்தை எரித்து கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்த நிலையில் என் மகனை குத்திவிட்டு உடலை என்னிடம் கொடுத்து  இருக்கலாம் என்று பன்னீர் செல்வத்தின் தாய் கதறி துடித்தார். 

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம்.. நீதிமன்றம் தீர்வு காணும் என எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா

ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் - அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு உத்தரவு..!

செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி  கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழிப்பறி வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Savukku Shankar Case: சவுக்கு சங்கர் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு  உத்தரவு..!

20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில்  கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்கரைகளில் ஆமைகள் உயிரிழப்பு.. வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சி..!

சென்னையில் கடற்கரைகளில் அடுத்தடுத்து ஆமைகள் உயிரிழந்து கிடக்கும் சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த மக்கள்..!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 49 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.

ஈரோடு இடைத்தேர்தல்: அனுமதியின்றி வாக்கு சேகரித்த நாதகவினர் மீது வழக்கு பதிவு..!

சாலையோரம் பதாகைகளை ஏந்தியாவாறு நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக  நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது இரு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு.. புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கு சிறை தண்டனை உறுதி

சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்

சென்னை முல்லை நகர் சுடுகாடு அருகே தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து வரும் 6 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை அப்டேட்

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோமியம் மிகப்பெரிய மருந்து.. நோய்களை குணப்படுத்தக்கூடியது- ஐஐடி இயக்குநர் காமகோடி

கோமியம் என்பது மிகப்பெரிய மருந்து என்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை.. உத்தரப்பிரதேச இளைஞர் அதிரடி கைது

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.