ராஞ்சி ஹாதியா இரயில் நிலையத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு பார்சல் கிளார்க்காகப் பணியாற்றிய காளி சங்கர் தோபியிடம், நிர்மல் குமார் பெகானி என்பவர் தனது இருசக்கர வாகனத்தைப் பீகாரின் சமஸ்திபூருக்குப் பார்சல் செய்ய அணுகினார். அப்போது வாகனத்தைப் பதிவு செய்ய காளி சங்கர் ரூ.100 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்மல் குமார் சிபிஐயிடம் புகார் அளித்தார். புகாரை உறுதி செய்த சிபிஐ அதிகாரிகள், 1995 ஏப்ரல் 27 அன்று பொறிவைத்து காளி சங்கர் தோபியை ரூ.100 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, 2004-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் காளி சங்கருக்கு ஓராண்டு மற்றும் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து காளி சங்கர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு சுமார் 21 ஆண்டுகள் நீடித்தது. 1995-இல் தொடங்கிய இந்த வழக்கு கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவுக்கு வந்துள்ளது. நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா அமர்வில் நடைபெற்ற விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தண்டனைத் தீர்ப்பை உறுதி செய்தது.
தற்போது 75 வயதாகும் காளி சங்கரின் முதிய வயது, உடல்நலக் குறைவு மற்றும் வழக்கின் நீண்டகால தாமதத்தைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் அவரது தண்டனைக் காலத்தைக் குறைத்துள்ளது. அதன்படி, ஓராண்டு சிறைத் தண்டனையை 6 மாதங்களாகவும், ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையை ஓராண்டாகவும் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இரண்டும் ஏககாலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்பதால் அவர் அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஏற்கனவே இந்த வழக்கினால் இரயில்வே வேலையை இழந்த காளி சங்கருக்கு, இதுவே முதல் குற்றம் என்பதைக் சுட்டிக்காட்டிய போதிலும் நீதிமன்றம் குற்றத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் அவரது பிணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், இரு மாதங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.

LIVE 24 X 7