டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று (செப்டம்பர் 12) மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 4-வது முறையாக இந்தியா தலைமை தாங்கும் இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம்
உலகின் 11 முக்கியப் பொருளாதார சக்திமிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு, உலகளாவிய உற்பத்தியில் 40 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 26 சதவீதப் பங்கையும் கொண்டுள்ளது. உருவமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுடன் பல நட்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டு நிகழ்வுகள் மற்றும் அட்டவணை
இன்று பிற்பகல் 2.35 மணிக்குத் தொடங்கும் மாநாட்டின் முதல் நிகழ்வாக, பன்முகத்தன்மையை வலுப்படுத்துவது குறித்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து கண்காட்சிப் பார்வை, குழுப் புகைப்படம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இரவு பிரதமர் மோடி அளிக்கும் விருந்துடன் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைகின்றன. இரண்டாம் நாளான நாளை காலை 10.50 மணிக்கு உலகளாவிய வளர்ச்சி குறித்த அமர்வு நடைபெற்று, 'புது தில்லி பிரகடனம்' வெளியிடப்படவுள்ளது.
பங்கேற்கும் முக்கிய தலைவர்கள்
பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் ஃபத்தா எல்-சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும், வெளியுறவு அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.
சவால்கள் மற்றும் புறக்கணிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஈரான்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக மாநாட்டின் கூட்டறிக்கை வெளியாவதில் கருத்தொற்றுமை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஏனெனில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்திருப்பதால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

LIVE 24 X 7