தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டம் திமுக நடத்தும் டிராமா- அண்ணாமலை விமர்சனம்

மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.

Mar 22, 2025 - 15:11
Mar 22, 2025 - 17:05
 0
தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டம் திமுக நடத்தும் டிராமா- அண்ணாமலை விமர்சனம்

டாஸ்மாக் முறைகேட்டில் அமலாக்கத்துறை கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்கும் என திமுக அரசை கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தி விட்டு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கருப்புக்கொடி போராட்டம்

தமிழகத்தை வஞ்சித்து வரும் கர்நாடகா, கேரளா மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி தமிழக பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் அவரவர் வீட்டு முன்பாக நின்று கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Read more: தொகுதி மறுசீரமைப்பு: 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றம்

இதேபோல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலில் நின்று கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி உள்ளோம். தமிழகத்திற்கும் பக்கத்து மாநிலத்திற்கும் பிரச்னைகள் இருந்து வருகிறது. 

ஆலோசனை கூட்டம்

கேரள மாநிலத்தோடு முல்லை பெரியாறு அணை பிரச்னை இருந்து வருகிறது. அந்த அணை நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதேபோல தென்காசி மாவட்டத்தில் செண்பகவல்லி அணை சரிப்படுத்தி விடுவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை. இந்த பிரச்னையால் 2 லட்சம் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வந்து குப்பைகளை கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து கழிவுகளையும் தமிழகத்திற்குள் கொட்டி வருகிறது கேரள அரசு. கர்நாடகாவுடனான காவிரி பிரச்சினை இதுவரை முடிவுக்கு வரவில்லை. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டியவை எதுவும் கிடைக்கவில்லை. அதனை பெற திமுக அரசு எதுவும் செய்யவில்லை.ஆனால் கேரளா முதலமைச்சர், கர்நாடகா துணை முதலமைச்சர் தமிழகத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை தமிழக முதலமைச்சரோடு சேர்ந்து அனைவரும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் உரிமை திமுக அரசு தொடர்ந்து விட்டு கொடுத்து வருகிறது. 

சாதிவாரி கணக்கெடுப்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. தென்னிந்திய மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் ஒரு சீட்டை கூட இழக்கப்போவதில்லை. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. 7.17 சதவீதம் இருக்கிறது.நாளை புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதே சதவீதம் தான் இருக்கும். மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது. இதனையும் கண்டித்து பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகிறோம். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலைகள் நடக்காத நாளே இல்லை. ஊழல் நடக்காத துறையே இல்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தெலங்கானா முதலமைச்சர் தற்போது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழக முதலமைச்சரோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கூறி வருவது எந்த வகையில் நியாயம். 

அரசியல் டிராமா

தமிழக அரசின் பல பொய்கள் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி என்பதை தெலங்கானா முதலமைச்சரிடம் தமிழக முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டமுடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் தமிழக முதலமைச்சர் சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. அரசியல் டிராமாக்காக இந்த ஆலோசனை கூட்டம், இருந்தாலும் கூட்டத்தில் பஜ்ஜி, டீ சாப்பிட்டு தமிழகத்தின் உரிமைகள் குறித்து மற்ற மாநில முதலமைச்சர்களிடம் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும். 

Read more: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்.. மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா? தெலங்கானா முதல்வர் கேள்வி..!

 அணை கட்டியே தீருவேன் என டிகே சிவக்குமார் பேசினார். இதனை எதிர்த்து ஒரு குரல் கொடுத்தாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக எம்பிக்கள் எதிர்ப்பை ஏன் பதிவு செய்யவில்லை. கேரளாவுக்கு சென்ற போது செண்பகவல்லி அணையை சரி செய்ய மு.க.ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்காக பேசாமல் அதனை விட்டு கொடுத்து விட்டார் முதலமைச்சர் முகஸ்டாலின். விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு. வடஇந்தியர்களை திமுக இழிவாக பேசி வருவதால் தான் பிற மாநில முதலமைச்சர்கள் வரவில்லை.  டாஸ்மாக் முறைகேட்டில் கண்டிப்பாக அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்க உள்ளது. திமுக பகல் கனவு காணக்கூடாது. அமலாக்கத்துறை சும்மா விடாது என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow