தொகுதி மறுசீரமைப்பு: 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் இந்திய மாநிலங்களே பெரிதும் உதவுகின்றன என பிஆர் எஸ் கட்சியை சேர்ந்த கே.டி.ராமாராவ் தெரிவித்தார்

Mar 22, 2025 - 14:48
Mar 22, 2025 - 14:48
 0
தொகுதி மறுசீரமைப்பு: 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதிகள் மறுசீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டு நடவடிக்கைக் குழு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள்,  கட்சிகளின் முக்கிய தலைவர்கள்  கலந்து கொண்டு தொகுதி மறுசீரமைப்பு  குறித்து தங்களது நிலைபாட்டை தெரிவித்தனர்.   

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை காக்க ஒன்று திரண்டிருக்கிறோம்.  இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் முக்கியமான நாளாக இந்த நாள் அமையப் போகிறது. தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்ப்பதாகவும், தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என்றும் தெரிவித்தார். இது வெறும் எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல; நமது அதிகாரம்,  எதிர்காலம், நமது உரிமைகளின் நலன் பற்றியது என்றும் கூறினார்.

ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி

மக்களை பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவை சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். நமது பண்பாடு அடையாளம், முன்னேற்றம் அபாயத்தை சந்திக்கும். சமூக நிதியும் பாதிக்கப்படும். குறிப்பாக, பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் நிர்ணயம் நடக்கக்கூடாது. நாம் அனைவரும் அதை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் குறைந்து வருவதால், நமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வலிமை குறையும். எனவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை சாதாரணமாக கருதக் கூடாது என்று சொல்கிறன். 

ஒருமனதாக தீர்மானம்

உரிமைகளை நிலை நாட்டிட தொடர் போராட்டம் அவசியம் என்ற முதலமைச்சர் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவதோடு, மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். எந்த சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறைய விடக்கூடாது என்ற உறுதியுடன் போராடுவோம் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய பல்வேறு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் தங்களின் நிலைப்பாடு குறித்தான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

தென்மாநிலங்களுக்கு அநீதி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கேடி ராமாராவ், தென்மாநிலங்களுக்கு அநீதி புதிதானது அல்ல, இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.ஜனநாயகம் நீர்த்துப்போவதை ஒருபோதும்  ஏற்க மாட்டோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் இந்திய மாநிலங்களே பெரிதும் உதவுகின்றன. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு தென் இந்திய மாநிலங்களுக்கு நியாயமற்றதாக இருக்கும் என தெரிவித்தார்.இதேபோல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow