தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்யத் தவறியதால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக வலைத்தளங்களுக்கு நேபாளம் அரசு நேற்று (செப்.4) தடை விதித்துள்ளது. பதிவு செய்வதற்கான ஏழு நாட்கள் காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விதிமுறைகள் மற்றும் பாதிப்புகள்
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் சமூக வலைத்தளங்கள் பதிவு செய்ய வேண்டும் என நேபாள அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லிங்க்ட்இன் போன்ற உலகளாவிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை. எனினும், டிக்டாக், வைபர், விட்க் மற்றும் போபோ லைவ் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, பதிவு செய்யப்படாத தளங்களை நேற்று நள்ளிரவு முதல் முடக்குமாறு நேபாள தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு அமைச்சகம் உத்தரவிட்டது. தளங்கள் பதிவு செய்த உடனேயே அவை மீண்டும் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் தடையால், வெளிநாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான நேபாள மக்களின் தகவல் தொடர்பு நேரடியாகப் பாதிக்கப்படும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பேஸ்புக்கின் பணமாக்கும் திட்டம் சமீபத்தில் நேபாளத்தில் தொடங்கப்பட்ட நிலையில், உள்ளூர் படைப்பாளிகளின் வருவாய் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பத்திரிகையாளர் கூட்டமைப்பு கண்டனம்
அரசின் இந்த முடிவுக்கு நேபாள பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (FNJ) கண்டனம் தெரிவித்துள்ளது. மாற்று வழிகளை அளிக்காமல் சமூக வலைத்தளங்களைத் தடை செய்வது, பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதோடு, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கிறது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராம் பிரசாத் தஹால் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து எந்தவொரு சமூக வலைத்தள நிறுவனத்திடமிருந்தும் அரசுக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.