நேபாள அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து வெடித்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு, நள்ளிரவில் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது 19 பேர் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தடைக்கு எதிரான போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு
புதிய தலைமுறையை குறிக்கும் ‘ஜென் Z’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று தலைநகர் காத்மாண்டுவை நோக்கி பேரணியாகச் சென்றனர். அங்கே நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஊழலை நிறுத்து, சமூக ஊடகத்தை அல்ல" போன்ற பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சரவையின் அவசரக் கூட்டம் மற்றும் அரசுத் தரப்பு விளக்கம்
இந்த விவகாரம் குறித்து நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அவசரக் கூட்டத்தில், சமூக ஊடகங்களுக்கான தடையை நள்ளிரவில் நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. நிறுத்தப்பட்ட சேவைகளை மீண்டும் தொடங்கவும் அரசு வழிவகை செய்துள்ளது.
இதுதொடர்பாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்ட அறிக்கையில், “அரசாங்கத்தின் முயற்சிகளும், ஜென் Z தலைமுறையினரிடையே உள்ள தெளிவின்மையும் இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வழிவகுத்தன. சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அதன் பயன்பாட்டிற்கு உகந்த சூழலை உறுதி செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏன் இந்தத் தடை?
சமூக ஊடகங்கள் நேபாள அரசின் சட்டத்துக்கு உட்படாமல் வணிகம் செய்வதை ஏற்க முடியாது என பிரதமர் ஒலி கூறி வந்தார். இந்த நிறுவனங்கள் நேபாள சட்டங்களின் கீழ் பதிவு செய்யத் தவறியதே தடைக்கு முக்கிய காரணம் என அரசு தெரிவித்திருந்தது. மேலும், போலியான ஐ.டி.கள், வெறுப்புப் பேச்சு, போலியான செய்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கு முன்னர், கடந்த ஜூலை மாதம் ‘டெலிகிராம்’ செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'டிக் டாக்' செயலி நேபாள சட்டங்களுக்கு இணங்குவதாக ஒப்புக்கொண்ட பின்னர், அதன் மீதான 9 மாதத் தடை நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.