சடலமாக கிடந்த குழந்தைகள்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி இளவரசி(30). இத்தம்பதியருக்கு விக்னேஷ் (6), சதீஷ்குமார்(3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு விஜயகுமாரின் வீட்டிற்கு முன் வெட்டி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில், இத்தம்பதியரின் இரு குழந்தைகளும் சதீஷ்குமார் விக்னேஷ் சடலமாக கிடந்துள்ளனர்.
உறவினர்கள் புகார்
இது குறித்து தகவலறிந்த இவரது உறவினர்கள், இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது இரு மகன்களும் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடப்பதாக தகவலறிந்த கட்டிடத் தொழிலாளி விஜயகுமார், தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது, துக்கியாம்பாளையம் எம்ஜிஆர் நகர் அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி படுகாயம் அடைந்தார்.
தாயிடம் விசாரணை
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற இவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குடும்ப தகராறில் ஆத்திரமடைந்து, தனது இரு குழந்தைகளையும், பெற்றத் தாயே தண்ணீர் தொட்டியில் தூக்கிப்போட்டு கொலை செய்ததாக, இவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இளம்பெண் இளவரசியிடம் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே தனது இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.