தமிழ்நாடு

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை
நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து

5 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று (ஏப்.15) கூடியது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், முதல்வரின் வாழ்த்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று கூட தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னார்.அவரின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் என்றார். இதைத்தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, இதிலிருந்து தெரிகிறது நயினார் நாகேந்திரனுக்கு நினைவு சரியாக தான் இருக்கிறது என தெரிவித்தார்.


அமைச்சர்கள் தெலுங்கில் பேசுவார்கள்

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், நீர் தேர்வை பொருத்தவரை திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது என குற்றம்சாட்டினர். பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு தான் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டது என அப்பாவு தெரிவித்தார்.

ஜெயலலிதா ஒரு வருடம் நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கினார். மும்மொழி கொள்கையில் இந்தி திணைப்பு என சொல்கிறார்கள். நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. ஏதாவது ஒரு மொழியை தான் படிக்க செல்கிறோம். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுவோர் அதிக அளவு உள்ளார்கள். கே.என்.நேரு, எவவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் போன்றவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

அமைச்சர் பதிலால் சிரிப்பலை

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளம் செல்லும் போது மலையாளத்தில் பேசியது அற்புதமாக இருந்தது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழில் எழுதி வைத்து தான் மலையாளத்தில் படித்தேன் என்றார். இதையடுத்து பேசிய நயினார் நாகேந்திரன், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதே சபையில் ஓசூர் எம்எல்ஏ கோபிநாத் தெலுங்கில் பேச அனுமதி கேட்டார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. தெலுங்கு பள்ளிகள் வேண்டும் என கேட்டதற்கு, ஏமி காவாலா? என ஜெயலலிதா தெலுங்கில் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என்றார். இதனால் பேரவையில் சிறிது சிரிப்பலை எழுந்தது.