தமிழ்நாடு

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க  இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!
மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர்காலங்களில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கவும்,கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது உள்ளிட்டவைகள் தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு ஐ.என்.எஸ் பருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் அருகே உச்சிப்புளியில் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை விமான தளம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா, பாக் நீரிணைப்பு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.என்.எஸ் பருந்து விமான தளத்திலிருந்து நவின போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் சட்டவிரோத அந்நிய ஊடுருவல்,போதை பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவதுடன், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டிணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் போது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்க்கு செல்லாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் உச்சிப்புளி ஐஎன்எஸ் கடற்படைக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் உள்ள வீரர்களுக்கு ராமேஸ்வரம் பாம்பன் போன்ற கடல் பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பதித்து நீந்துவது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது, சந்தேகப்படும் படகுகளை இறங்கி சோதனை செய்வது மற்றும் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது கடல் பகுதி மற்றும் தீவு பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பது, ரோந்துப் பணி உள்ளிட்டவைகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடல் படை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போது பாதுகாப்பிற்காக கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி ஏழு நாட்கள் மன்னார் வளைகுடா தீவுகள், பாக் ஜலசந்தி மற்றும் பாம்பன் பாலம் ஆகிய இடங்களில் மூன்று ஹெலிகாப்டர்களில் கடற்படை பைலட்கள் பயிற்சி அளிக்கபடவுள்ளதாக ஐ.என்.எஸ் பருந்து கடற்படை வட்டார தகவல்கள் தெரிய வருகிறது.