நாக்பூர் மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இரண்டு இடங்களில் மே 22 ஆம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனை செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடைய அப்துல் ஜாஃபர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டது.
குறிப்பாக மிகப்பெரிய அளவில் செம்மரக்கட்டைகளை துபாய்க்கு கடத்தி அதற்கு பதிலாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் கும்பல் தொடர்புடைய அப்துல் ஜாஃபர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சொத்துக்கள், கட்டுமானங்கள், பிளாட்டுகள் அதிக விலை உள்ள சொகுசு வாகனங்கள் ஆகியவை கடத்தலின் மூலம் வரும் வருமானத்தை வாங்கியதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வருமான ஈட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.மேலும் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது அப்துல் ஜாஃபர் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
இதையடுத்து நாக்பூர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அப்துல் ஜாபரை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு பெற்றனர். மேலும் நாளை வரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அப்துல் ஜாபரை நாக்பூருக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை நாக்பூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை வழக்கில் அடிப்படையாக வைத்து அப்துல் ஜாஃபர் மற்றும் தொடர்புடையவர்கள் மீது இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் 13 முறை கண்டெய்னர்கள் மூலமாக செம்மரம் கட்டைகளை துபாய்க்கு பொருட்கள் எடுத்துச் செல்வதாக கூறி கடத்தியது தெரியவந்துள்ளது
ராய்ப்பூர் அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் மூலம் இந்த குற்றத்தை நிகழ்த்தியது அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. சுமார் 68 கோடி ரூபாய் அளவிற்கு செம்மர கட்டைகள் கடத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. செம்மர கடத்தல் மட்டுமல்லாது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை கண்டுபிடித்த பல்வேறு செம்மர கடத்தல்களிலும் கைதான அப்துல் ஜாபருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விசாரணை மூலம் தொடர்ந்து செம்மரக்கட்டை கடத்தும் நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.