தமிழ்நாடு

Chennai Rains: 10 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்.. சென்னை கனமழை குறித்து வெதர்மேன் ட்வீட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

Chennai Rains: 10 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்.. சென்னை கனமழை குறித்து வெதர்மேன் ட்வீட்
rare April thunderstorm rains in Chennai
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இருப்பினும் சென்னை புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் சில நாட்களாக அதிகரித்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணபட்டிருந்த நிலையில் திடீரென புறநகர் பகுதிகளான தாம்பரம்,குரோம்பேட்டை,பல்லாவரம், மீனம்பாக்கம்,வண்டலூர்,பெருங்களத்தூர்,சேலையூர்,மேடவாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது,

வெதர்மேன் ட்வீட்:

தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் (வானிலை ஆய்வாளர்) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் சென்னையில் அதிகனமழை பெய்துள்ளது. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் பெரிய அளவில் சென்னையில் மழை இருக்காது. காலை 11:30 மணி நேர நிலவரப்படி, வளசரவாக்கம் (W152) பகுதியில் 100 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நெற்குன்றம், சாலிகிராமம் பகுதியில் 90 மி.மீ-க்கு மழையளவு பதிவாகியுள்ளது.




சென்னை தவிர்த்து திருவள்ளுர் மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், புழல், பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.