தமிழ்நாடு

கோகுலம் சிட் ஃபண்ட்சில் ஒன்றரை கோடி பறிமுதல் – விதிகள் மீறியதாக ED குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

கோகுலம் சிட் ஃபண்ட்சில் ஒன்றரை கோடி பறிமுதல் – விதிகள் மீறியதாக ED குற்றச்சாட்டு
அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ஒன்றரை கோடி ரூபாய்

கேரளாவைச் சேர்ந்த கோகுலம் கோபாலன் என்பவர் தொடங்கிய ஸ்ரீ கோகுலம் சிட் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் கோகுலம் டவர்ஸ் என்ற இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.


ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரளா கோழிக்கோடு பகுதியிலும் சென்னையில் இரண்டு பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையின்போது ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறை விசாரணையில் ஸ்ரீ கோகுலம் சிப்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் இந்தியாவில் இருந்து வெளியில் இருக்கும் நபர்களிடமிருந்து சந்தாவை நிதி நிறுவனத்திற்கு பெற்றதாக நுண்ணறிவு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.


சந்தா தொகையானது இந்தியாவிலிருந்து வெளியில் இருக்கும் நபர்களிடம் ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆர்பிஐ விதிகளை மீறியது தெரியவந்துள்ளது. மேலும் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விதி மீறல்

மேலும் தொடர் விசாரணையில் ஸ்ரீ கோகுலம் சிட் ஃபண்ட் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் சுமார் 371. 80 கோடி ரூபாய் அளவில் இந்தியாவிலிருந்து வெளியில் உள்ள நபர்களிடம் வசூல் செய்துள்ளதாகவும், மேலும் காசோலைகளாக 220 புள்ளி 74 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் பணமானது வெளிநாட்டில் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் எம்புரான் படம் 180 கோடி ரூபாய் பொருட்செலவில் கோகுலம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.