தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், நேருவின் மகனும், பெரம்பலுார் தொகுதி தி.மு.க. எம்.பி.,யுமான அருண் ஆகியோர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு நேருவின் சகோதரர்கள் மற்றும் மகன் ஆகியோர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் கே.என்.நேருவின் மகன் அருண் ஆகியோருக்கு தொடர்புடைய நிறுவனஙளில் தொடர்ந்து 2 நாட்கள் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனால், சோதனையின் இடையில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் கே.என்.ரவிச்சந்திரனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அமலாக்கத்துறையின் சம்மனின் அடிப்படையில் மதியம் 2.20 மணியளவில் கே.என்.ரவிச்சந்திரன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகினார். குறிப்பாக வங்கி பணப் பரிவர்த்தனை குறித்த எந்த கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமாக ரவிச்சந்திரன் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே பத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் குறித்தும், கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்தும் ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Truedom epc, tvh நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் 13 ஆண்டு கால பண பரிவர்த்தனை குறித்தும் தகுந்த விபரங்களோடு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்குரிய பதிலை எழுத்துப் பூர்வமாகவும் அதனை அமலாக்கத்துறையினர் வீடியோ பதிவும் செய்துள்ளனர்.
சுமார் பத்து மணி நேரமாக கேஎன் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 மணி நேர விசாரணை நடத்திய நிலையில் நிறைவு பெற்று அவர் காரில் புறப்பட்டார். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மீண்டும் சம்மன் அளித்தால் ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.