சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகையிட்டு 7வது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களைப் பாஜக சார்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.அப்போது பேசிய அவர், ஐந்து ஆறு மண்டலங்களில் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்கள் ஆயிரம் பேர் இந்தப் பகுதியில் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.
போராட்டத்திற்கு ஆதரவு
இந்தத் தூய்மை பணியாளர்கள் 15 வருடங்களாகப் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை வைத்துப் போராட்டம் நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
2021 ஆண்டின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.அதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டார் எனவும் நினைவு கூர்ந்தார்.
அவர் எழுதிய கடிதத்திற்கு மாறாகத் தற்போது சென்னை மாநகராட்சி நடந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டினார். தூய்மை பணியாளர்கள் ராம்கி என்கிற தனியார் நிறுவனத்திடம் வேலை செய்ய மாநகராட்சி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஜெனரலாக செயல்படுகிறார்
தற்போது மாநகராட்சி முழுவதும் ஆயிரம் டன் குப்பையில் அகற்றப்படாமல் இருப்பதாகவும், அதில் ஒரு பகுதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மற்றும் துணை முதலமைச்சரின் சேப்பாக்கம் தொகுதிகளையெனச் சுட்டிக்காட்டினார். மேயர் பிரியா சொல்வது எதுவும் ஆணைய குமரகுரு கேட்பதே இல்லை. ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறும் எனத் தெரிவித்தார். குமரகுருவை கடந்த ஒருவாரம் காலமாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து, அவர் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜெனரலாகத் தான் செயல்படுகிறார்.
மக்கள் அலைபேசி எடுப்பதில்லை எனவும், தொழிலாளர்கள் பிரச்சினை தீர்ப்பதற்கும் எந்த ஒரு நடவடிக்கும் எடுப்பதில்லையெனக் குற்றம்சாட்டினார். தூய்மை பணியாளர்களின் பிரச்சினையை உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனைபேரில் தற்போது தூய்மை பணியாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். திமுக கூட்டணி இருக்கக்கூடிய கட்சிகள் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவுக்கு அளிக்கவில்லை என்ற கேள்விக்கு, இந்தியாவில் விசித்திரமான சட்டம் ஒன்று என்றால் லேபர் ஆக்ட் 31 தான். கடந்த 10 நாட்கள் முன்பு நியமன குழு கூட்டத்தில் மேயர் இரண்டு மெம்பர்கள் வேலு ராஜு நியமன ஆணையத்திற்கு கையெழுத்து போடமாட்டார்கள் எனத் தெரிவித்தார்கள். நாங்கள் ரிசைன் பண்ணுகிறோம். நீங்களே கமிஷன் போட்டுக்கோங்க என அவர்கள் குறிப்பிட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மூன்று பேரின் கையெழுத்து இல்லாமல் தான் நேற்று முதலமைச்சர் 183 பேருக்குப் பணி நியமன ஆணையம் கொடுத்தாரெனத் தெரிவித்தார். அந்த 183 பேர் பணி நியமன ஆணையத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தன்னிச்சையாகச் செயல்படுகிறார்
மாநகராட்சி ஆணையர் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், 50 லட்சம் முதல் 1,00,000 வரை நிறைய காண்ட்ராக்டர்களை தனியாரிடம் ஒப்படைக்கிறார். அதற்காகப் பல கோடி ரூபாய் வேலை நடந்துட்டு இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.
சென்னை மாநகராட்சி நடக்கும் ஊழலைப் பட்டியலிட்டு கூடிய விரைவில் கவர்னருக்கு நயினார் நாகேந்திரன் அனுமதி பெற்று கொடுக்கப்படும்.183 பேர் பணி நியமனம் ஆணையத்தில் ஏன் மேயர் கையெழுத்திடவில்லையெனக் கேள்வி எழுப்பினார்.அதேநேரம் மேயர் பிரியா கையெழுத்திடாமல் 183 பேருக்குப் பணி நியமனம் எவ்வாறு கொடுத்தார்கள் என்கிற பட்டியலைச் சேகரித்துக்கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.