சென்னை மெட்ரோ இரயில் நிறுவனமானது UBER மற்றும் ONDC நெட்வொர்க் உடன் இணைந்து, UBER செயலி மூலம் மெட்ரோ இரயில் பயணத்திற்கான டிக்கெட்களை பெறும் வசதியை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் இன்று (07.08.2025) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., அறிமுகப்படுத்தினார்.
இன்று முதல், UBER பயனாளர்கள் தங்களது மெட்ரோ பயணங்களை திட்டமிடவும், QR அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறவும், நேரடி மெட்ரோ பயண தகவல்களையும் UBER செயலியின் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம். அறிமுக சலுகையாக 2025-ல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் பயணச்சீட்டுகளில் 50% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகை UBER செயலியில் மட்டுமே கிடைக்கும்.
இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கும் பிற மெட்ரோ பயணச்சீட்டு சேவை தளங்களில் பொருந்தாது. UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கு UPI முறையே பயன்படுத்தப்படும். டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), ஆலோசகர் கே.ஏ.மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்), UBER நிறுவனத்தின் உயர் இயக்குநர் மணிகண்டன் தங்கரத்தினம், ONDC நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் நிதின் நாயர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் UBER நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்றவற்றினை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Metro Rail Limited Introduces Metro Ticketing in UBER App.#chennaimetro #chennai #metrorail #cmrl pic.twitter.com/6cbStZV311
— Chennai Metro Rail (@cmrlofficial) August 7, 2025