தமிழ்நாடு

விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறும் – நடிகர் தாடி பாலாஜி நம்பிக்கை

தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என நடிகர் தாடி பாலாஜி பேட்டி

 விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறும் – நடிகர் தாடி பாலாஜி நம்பிக்கை
தவெக தலைவர் விஜய்க்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறும் என நடிகர் தாடி பாலாஜி நம்பிக்கை
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே குமரஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு குமாரசுவாமி கோவிலில் நடிகர் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்தார். அப்போது பக்தர்கள் அவருடன் ஆர்வமுடன் குழு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

விஜய்க்கு வாக்குகளாக மாறும்

தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்களுக்கு நடிகர் தாடி பாலாஜி அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாடி பாலாஜி, “தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமது நண்பருமான நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணம் வெற்றி அடைய வேண்டும் என சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், தாடி பாலாஜிக்கு மக்கள் கூட்டம் கூடும் நிலையில், உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்க்கு கூட்டம் வராமல் இருக்குமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றும், இந்த கூட்டம் கட்டாயமாக வாக்குகளாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கட்டாயம் மாற்றம் ஏற்படும்

மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில், கட்டாயம் மாற்றம் ஏற்படும் என்றார். கடந்த 4 ஆண்டுகளில் கொலைகள் நடந்து வருவது சாதனையாக உள்ளதாகவும், ஆணவக்கொலைகள், காவல் நிலைய மரணங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் இந்த ஆட்சியில் ‘யார் அந்த சார்’ என்ற கேள்வி உள்ளதாகவும், அது அவர்களுக்கு தான் தெரியும் எனவும் நடிகர் பாலாஜி கூறினார்.