கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை ஆலப்பாக்கம் அருகே பேருந்து சென்ற பொழுது குள்ளஞ்சாவடி சாலையில் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, அரசு விரைவு பேருந்து, அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.
அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய இந்த விபத்தில், அரசு பேருந்து அருகில் இருந்த வயல்வெளியில் இறங்கியது. அரசுப்பேருந்து, வயல்வெளியில் இறங்கிய நிலையில், பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து விபத்து குறித்து கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு
2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.