தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நேற்று (13.07.2025) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது சிவானந்தம் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் பல இடங்களில் அக்கட்சியின் தொண்டர்களால் பலத்த சேதமடைந்து உள்ளது. விஜய் அரசியலுக்குள் வந்த பிறகு பொதுவெளியில் அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்களிலும் இதை நிலை தான் நீடிக்கிறது.
விஜய் தன் தொண்டர்களை கட்டுப்படுத்த தவறுகிறார் என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், போராட்டம் நடைப்பெற்ற சிவானந்தம் சாலையில் சேதமடைந்த தடுப்பு கம்பிகளை தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக சரி செய்து தருகின்றோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை(தெ) வடக்கு மாவட்ட செயலாளர் அப்புனு, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி பொறியாளருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
இக்கடிதத்தினை மேற்கொள்காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர், தவெக சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தினை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு-
”நேற்று ஞாயிற்றுக்கிழமை த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் நடந்த போராட்டத்தில், தடுப்புச்சுவர் உள்ளிட்ட அரசாங்கச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், அவற்றைச் சரிசெய்து தருவதாகவும் ஒப்புக்கொண்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நடிகர் ஒருவரின் பின்னால் திரளும் ரசிகர்களின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும் என்பதையே இது உறுதிப்படுத்தியுள்ளது. அரை மணி நேரத்தில் முடிந்த இந்தப் போராட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே பங்கெடுத்திருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருச்சியில் கடந்த ஜூன் 14 அன்று 'மதச்சார்பின்மை காப்போம் பேரணி' நடைபெற்றது. இந்தப் பேரணியில் லட்சக்கணக்கில் சிறுத்தைகள் பங்கேற்றனர். தடுப்புச்சுவரின் இருமருங்கும் சிறுத்தைகள் முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். இருப்பினும், எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. பேரணி முடிந்த பிறகு தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளையும் சிறுத்தைகள் அகற்றினர்.
இதுதான் சிறுத்தைகளின் அரசியல் செயல்பாட்டின் அடையாளம். வெறுமனே ரசிக மனநிலையில் கும்பலைக் கூட்டினால் இப்படித்தான் சேதாரத்தை உருவாக்குவார்கள். தமிழக வெற்றிக் கழகம் வெறும் ரசிகர்களை உருவாக்காமல் முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது” என தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.