திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், அமைச்சர்கள் பலர் தங்கள் கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், பொதுவான இடங்களிலும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். உதாரணமாக அமைச்சர் பொன்முடி கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து, பெண்களிடம் "ஓசி பஸ்" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொரு விழா நிகழ்வில் ஒன்றிய குழு தலைவரை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியும் சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி சைவமா? வைணவமா? என அநாகரீகமாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், கட்சியில் பொன்முடி வகித்த பதவியினை பறித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி திமுகவின் கழக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், பொன்முடி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுகவின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அமைச்சரின் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு தன் கண்டனம் தெரிவித்துள்ளார். ”அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னைத் துன்புறுத்துவது போல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் நமது கட்சியினர் யாரும் புது பிரச்னையை உருவாக்கிடக்கூடாது என்கிற எண்ணத்தோடு தான் கண் விழிக்கிறேன். சில நேரம் தூங்க விடாமலும் செய்துவிடுகின்றனர்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.