தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அனைவரும் ஒரே கூட்டணியாகத்தான் இருக்கிறோம் என்றும், தங்கள் பலமே கூட்டணிதான் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொள்கை எதிரிகளை வீழ்த்தவே தோழமை உணர்வுடன் இணைந்து பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சையில் நிகழ்வு மற்றும் ஆய்வு
2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளன. இதற்கான அறிமுக நிகழ்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியனும் கலந்து கொண்டனர்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். "பொதுவாகவே மழைக்காலம் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. அப்படித் தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன." என்றார்.
கூட்டணி பலம் குறித்துப் பேச்சு
தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணி குறித்து பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியாகத்தான் உள்ளோம். எங்களது பலமே கூட்டணிதான். ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்துகள், ஒவ்வொரு கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும், பொது எதிரியாகவும் கொள்கை எதிரியாகவும் இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு இருப்பதினால், ஒற்றுமையாகத் தோழமை உணர்வோடு இருக்கிறோம். எங்களது வெற்றியை, கூட்டணியின் பலத்திற்கான வெற்றியாகத்தான் பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7