தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துத் தொகுதி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார். கடந்த தேர்தலில் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை நினைவு கூர்ந்த அவர், இந்த முறையும் 100 சதவீத வெற்றியை மக்கள் தேடித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திருச்சிக்கு ரூ. 26,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்
திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகத் திமுக அரசு இதுவரை சுமார் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் பட்டியலிட்டார். தலைநகர் சென்னைக்குச் சவால் விடும் வகையில் திருச்சி தரம் உயர்ந்து வருவதாகவும், இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் விமான நிலையத்திற்கு இணையானது என அண்டை மாநிலத்தவர்களே வியப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் 327 கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக அமைதி மற்றும் மகளிர் நலன்
பாஜக ஆளும் மாநிலங்களைப் போலத் தமிழகத்தில் மதக் கலவரங்களோ அல்லது சாதி மோதல்களோ இல்லை என்பதை வலியுறுத்திய அவர், அமைதியான சூழல் நிலவுவதால் தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகள் குவிந்து வருவதாகத் தெரிவித்தார். மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதாகவும், தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களையும் அரசு நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கான வாக்குறுதி
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் காலங்களில் நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீராக்கி, அனைத்துத் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளதாகத் தனது உரையில் அவர் நிறைவு செய்தார்.

LIVE 24 X 7