தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள ஒரு கடிதம், சமூக வலைதளங்களில் 'மீம்' மெட்டீரியலாக மாறியுள்ளது.
கட்சித் தொடங்கி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், தற்போது சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து வருகிறார். "விஜய் மக்களை நேரில் சந்திப்பதில்லை" என்ற விமர்சனங்களுக்குப் 'பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல்' தான் காரணம் எனத் தவெக தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. சமீபத்தில் வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டதற்கும் இதையே காரணமாகக் கூறினர். இந்நிலையில், விஜய்க்குப் போதுமான பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தவெக நிர்வாகி நிர்மல் குமார் ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
'ஒய்' பிரிவு பாதுகாப்பில் குறைபாடு?
அந்தக் கடிதத்தில், சென்னை காவல்துறையினர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு முறையான பாதுகாப்பு அளிப்பதில்லை என்றும், குறிப்பாக முதலமைச்சர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் படுமோசமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'ஒய்' (Y) பிரிவு பாதுகாப்பிலும் குறைபாடுகள் இருப்பதாகப் பக்கம் பக்கமாகப் புகார்களை அள்ளி வீசியுள்ளனர்.
அட்ரஸ் மாறிய கடிதம்!
இங்குதான் ஒரு சுவாரசியமான 'ட்விஸ்ட்' ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் உள்துறைச் செயலாளராகப் பணியாற்றி வருபவர் கோவிந்த் மோகன். ஆனால், தவெக தரப்பில் அனுப்பப்பட்ட கடிதமோ, முன்னாள் உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா என்பவருக்கு விலாசமிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதமே பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்று, தற்போது மணிப்பூர் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்டேட் ஆகாத நிர்வாகிகள்
சென்னைப் போலீசார் மீது புகார் சொல்லப் போய், தற்போதைய உள்துறைச் செயலாளர் யார் என்ற அடிப்படைத் தகவல் கூடத் தெரியாமல் தவெக கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. "கட்சி தலைவர் முதல் நிர்வாகிகள் வரை யாருமே அப்டேட் ஆகாமல் இன்னும் 2024-லேயே இருக்கிறார்களே" என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

LIVE 24 X 7