அரசியல்

தமிழக பாஜகவின் தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்? விழா ஏற்பாடு தீவிரம்

தமிழக பாஜகவின் புதிய மாநிலத்தலைவராக பலரின் பெயர் அடிப்பட்ட நிலையில் அனைவரையும் முந்தி நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜகவின் தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்? விழா ஏற்பாடு தீவிரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைப்பெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியின் உள்கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு மாற்றாக வேறொருவரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியன. யார் அடுத்த பாஜகவின் மாநிலத் தலைவர் ? என்கிற ரேஸில் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெயர்கள் அடிபட்டது.

தற்போது அமித்ஷா தமிழம் வருகைத்தந்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரிரு நாளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.



சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில், புதிய தலைவரை அறிவிக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, எல்.முருகன் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்ததும், தலைவரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது. மத்திய அமைச்சர்கள் உட்பட கட்சியின் நிர்வாகிகள் என சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more : 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய ஆலோசனை!