சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், அஜித்குமார் மரண வழக்கை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தவெக சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் “சாரி வேண்டாம்... நீதி வேண்டும்.” என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலாளி அஜித்குமார் குடும்பத்தாரிடம் முதலமைச்சர் சாரி சொன்னார். அது தவறில்லை. அதேபோல் உங்கள் ஆட்சிக்காலத்தில் 24 பேர் லாக் அப்பில் உயிரிழந்துள்ளனர். அவர்களிடம் நீங்கள் சாரி சொன்னீர்களா? தயவு செய்து அவர்களிடமும் சாரி சொல்லுங்கள்.
மேலும், போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. அதேபோல், 24 குடும்பத்தாருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அப்போது நீங்கள் இது காவல்துறைக்கு பெரும் அவமானம் என்று தெரிவித்தீர்கள். ஆனால் இன்றும் அஜித்குமார் வழக்கு சிபிஐக்குத் தான் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பெயர் என்ன?
அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. அனைத்திலும் நீதிமன்றம் தலையிட்டு கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? முதல்வர் பதவி எதுக்கு சார்?
அதிகபட்சம் உங்களிடம் இருந்து வரும் பதில், 'சாரி மா, நடக்கக்கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே. இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போ ‘சாரி மா’ மாடல் சர்காரா மாறிவிட்டது. இந்த ஆட்சியை விட்டு இந்த அரசு வெளியேறுவதற்கு முன் நீங்கள் செய்த எல்லா தவறுக்கும் பரிகாரமாக சட்ட ஒழுங்கை சரி செய்தே ஆக வேண்டும்.
இல்லையென்றால் மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று உங்களை சரி செய்ய வைப்போம். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதற்கான அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும்'' என்று அவர் கூறினார்.
அரசியல் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் கலந்து கொண்ட முதல் போராட்டம் என்பதால், இது கவனம் பெற்றுள்ளது.