தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்று தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து, கவுண்டம்பாளையம் தொகுதியிலும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று கோவையில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்திற்கு யாரும் செய்ய முடியாத திட்டங்களான அத்திக்கடவு - அவிநாசி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம், மெட்ரோ ரயில் அறிவிப்பு, என அறிவிப்பு வெளியிட்டு மூன்று கோடி ரூபாயை ஒதுக்கினார் எடப்பாடி பழனிசாமி.
அதிகமான பாலங்கள், சாலைகள், கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு மருத்துவமனை மேம்பாடு போன்ற திட்டங்களை கொடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி. நான் அமைச்சராக இருந்தபோது, கோவை மாவட்டத்துக்கு தேவையான அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெற்றுருக்கிறேன். நாம் என்ன கேட்டாலும் அவர் நிச்சயம் செய்து கொடுப்பார்.
தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் கூட, யார் ? என்ன கூறினாலும் அதை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசுக்கு எடுத்துரைத்துக் கொண்டு இருக்கிறார். கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்.
கடந்த 2010-ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்களுடைய பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி தான் கோட்டைக்கு சென்றார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் அவருடைய பிரச்சாரத்தை இங்கு இருந்து தான் ஆரம்பித்து இருக்கிறார். நிச்சயமாக 2026 தேர்தலில் வென்று கோட்டையை பிடிப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
கடந்த நான்கு வருடங்களில் உங்களுக்கு திமுக எதுவுமே செய்திருக்காது. ஆனால் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்கும் முதல்வராக எடப்பாடி இருந்து இருக்கிறார், இருப்பார் என்பதால் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.