அதிமுக பாஜக கூட்டணி
தமிழகத்தில் அதிமுக தலைமையில் 2026ல் சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்க உள்ளது. 2026 தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது இபிஎஸ் மற்றும் அதிமுக மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இபிஎஸ், இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என தெரிவித்திருந்தார். மேலும் பாஜக கூட்டணியால் தான் பல மூத்த அமைச்சர்கள் தோல்வியை தழுவியாதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
கூட்டணி குறித்து விமர்சனம்
இந்த நிலையில், பாஜக- அதிமுக கூட்டணி என்பது நிர்பந்தத்தின் காரணமாக வைத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில், பாஜக- அதிமுக கூட்டணியை பார்த்து பலர் விழி பிதுங்கி போய் உள்ளதாக முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், இந்த கூட்டணி குறித்த அறிவிப்பால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு தூக்கத்தை தொலைவிட்டதாகவும் சாடி இருந்தார்.இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே.2ல் செயற்குழு கூட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழுக்கூட்டம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த செயற்குழுக்கூட்டத்தில் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.