கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் வட்டம், வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி குறித்த அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
”கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் வட்டம், வடக்கு கொளக்குடி கிராமம், ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) த/பெ.சாதிக் பாஷா, முகமது ஹபில் (வயது 10) த/பெ.ஜாஃபர் சாதிக் மற்றும் உபையதுல்லா (வயது 9) த/பெ.முஜிபுல்லா ஆகிய மூன்று சிறுவர்கள் நேற்று (14.4.2025) மாலை 4,00 மணியளவில் கொல்லிமலை கீழ் பாதி கிராம எல்லையில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மேற்படி மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
Read more: அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்...குமரியில் 350 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு