பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
செங்கோட்டையன் கோரிக்கை குறித்து
அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கோரிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார்" என்று டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.
விஜய், முதல்வர் ஸ்டாலின் மீது தாக்கு
நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடியது குறித்த கேள்விக்கு, "விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணா, எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தாலே அதிமுகவுக்கு ஓட்டு விழும். அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஒரு காலத்திலும் செல்லாது. எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அதிமுக வாக்குகளை பெறலாம் என விஜய் நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும்”என்று தெரிவித்தார்.
மேலும், "நடிகர் விஜய் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து 'ஸ்டாலின் அங்கிள்' என்று கூறினார். பிறகு, 'ஸ்டாலின் சார்' என்றார். என்னிடம் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பேன். 'ஸ்டாலின் சாத்தான் சார்', அவரது மகன் உதயநிதியை பார்த்து, 'உதயநிதி குட்டிச்சாத்தான் சார்' என்று கூற ஆலோசனை வழங்கியிருப்பேன்" என்று அவர் கிண்டலாகப் பேசினார்.