விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது,
ரைடுக்கு பயந்து காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த கட்சி திமுக என்று விமர்சித்தார். ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸோடு திமுக கூட்டு வைத்துள்ளதாகவு, இது ஒவ்வாத ஒப்பாத கூட்டணி , இது என்றுமே மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணி என்று கூறினார்.
புரட்சித்தலைவி அம்மாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி கூட்டணி. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சிறப்பான கூட்டணி என தேர்தல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த கூட்டணி வரவேற்கத்தக்க கூட்டணி இன மக்கள் பேசுகிறார்கள்.
திமுகவை தோற்கடிக்க யாருடனும் கூட்டு சேர்வோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி தான் இந்த கூட்டணிக்கு தலைமை என்று பேசினார்.
எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னவர் வைகோ. அவர் தற்போது வைத்துள்ள கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி, இதுபோன்று எந்த அரசியல் கட்சி மீதும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் வைக்கவில்லை.
இந்தியாவில் வலுவான அரசு இருக்க வேண்டும், பிரச்சினை இல்லாத அரசு இருக்க வேண்டும் தமிழகத்தில் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எல்லோரிடத்திலும் கலந்து பேசி இந்த கூட்டணியை அமைத்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகள் தெரிவிக்கின்ற கருத்துகள் எல்லாம் அவர்களுக்குள் பயம் வந்து விட்டதால் தான் அவ்வாறு பேசுகிறார்கள். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பவர். அதிமுக கூட்டணியில் இல்லை என்று அவர் கூறவில்லை தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். அதிமுகவோடு நெருக்கமாக இருப்பவர் தான் தலைவராக வந்துள்ளார். நெருக்கமாக இருந்தால் தான் கூட்டணி வலுவாக இருக்கும் என்று கூறினார்.
அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும் . மாதம் மாதம் கட்சிகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும் .எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் இனி நிகழும். பாஜகவிற்காக அம்மாவும் ஓட்டு கேட்டுள்ளார். கலைஞரும் ஓட்டு கேட்டுள்ளார், ஸ்டாலினும் ஓட்டு கேட்டுள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வைத்துவிட்டு திமுக தற்பொழுது புனிதர்களைப் போல ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.
திமுக தனித்து நின்றால் அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத்தான் தயார். எடப்பாடி பழனிச்சாமி நிற்க திறமை உண்டு திமுகவிற்கு உண்டா? அதிமுக பாஜக கூட்டணி வைத்தால் ஏன் பயப்படுகிறீர்கள். உங்கள் கட்சியிலேயே பல பிரச்சினைகள் உள்ளது.
திமுக அமைச்சர்கள் பெண்களை தவறாக பேசுகிறார்கள். சைவ வைணவ மதத்தை அமைச்சர் பொன்முடி தவறாக பேசுகிறார். நீங்கள் உங்களை முதலில் சரி செய்ய வேண்டும். சிறுபான்மை பெரும்பான்மை என அனைத்து மக்களுக்கும் நல்லவராக வல்லவராக வாழக்கூடியவர் ஆட்சி செய்யக்கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக இருக்கும் இடத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு இருக்கும் என்று கூறினார்.
திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டியென விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, 2025 இல் அருமையான ஜோக் இதுதான்.அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி.நான்தான் நான்தான் என அவர்களாகவே கூறக்கூடாது.தவெக களத்திலேயே கிடையாது களத்தில் நிற்பது திமுகவிற்கு திமுகவும் அதிமுக மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
திமுக மதம் கொண்ட யானையாக நிற்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சினம் கொண்ட சிங்கமாக நிற்கிறார். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் மதம் கொண்ட யானை, அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார்.
அதிமுகவிற்கு சிறுபான்மை ஓட்டுகள் உறுதியாக வரும்.திமுகவை நம்பி நம்பி சிறுபான்மை மக்கள் கெட்டுவிட்டனர். அதிமுகவை நம்பிய சிறுபான்மை மக்கள் கெட்டதாக வரலாறே கிடையாது. உறுதியாக சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிமுகவிற்கு விழும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.