காமராஜரின் 123-வது பிறந்தநாள் உள்ளிட்ட ஐம்பெரும் விழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "எந்தவித மானமும் ஈணமும் இல்லாமல் பாஜகவோடு அதிமுக கை கோர்த்துள்ளது. ஜெயலலிதாவை பற்றி பேசியதற்கும், இந்து முன்னணியின் முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியாரை விமர்சித்ததற்கும் இதுவரை பாஜக மன்னிப்பு கேட்கவில்லை. இதற்கெல்லாம் ஏன் அதிமுக வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? பாஜகவிடம் அதிமுக கட்சியை அடமானம் வைத்து விட்டது.
தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணி போலி கூட்டணி, புறக்கணிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என மக்களே தீர்மானித்து இருக்கிறார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், "தமிழகத்தில் பாஜக அடி எடுத்து வைக்கும் சூழ்ச்சி முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் பாஜகவோடு யாரும் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இன்று நம்முடைய மிகப்பெரிய துரதிஷ்டம் அதிமுக பாஜகவோடு கைகோர்த்து அடுத்த தேர்தலை சந்திக்க உள்ளது. பாஜக என்றால் இந்து மதவாத கட்சி, இந்தியை திணிக்கும் கட்சி, தென்னாட்டு மக்களை வெறுக்கும் கட்சி என ஆழமாக பதிந்த பிறகும் அதிமுக அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்குள்ளே இன்றைக்கு பல முரண்பாடு உள்ளது.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார், எடப்பாடி பழனிசாமி தனி பெரும்பான்மை தனிக்கட்சி ஆட்சி என்கிறார். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் ஒரு சுலபமான வழி, அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடித்து விட்டால் இந்த பிரச்சனை எல்லாம் எழாது. எதற்காக இந்த தலைவலியை தேடிக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பாஜக நுழைந்து விட்டால் தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது” என்பார்கள். அதுபோலத்தான் “ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது".
மதுரையில் சுற்றுச்சுவரை கட்டி விட்டு எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியதாக நாடாளுமன்றத்தில் கூறுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை தராததற்கு காரணம் இது தமிழ்நாடு, இங்கு அவர்கள் ஆட்சியில் இல்லாததால் வஞ்சிக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு மாநிலத்திற்காவது எதற்காவது நிதி வழங்கவில்லை என கூற முடியுமா? ஆனால் தற்போது பாஜக ஆளாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் தான் இந்தியாவா? மற்ற மாநிலங்கள் இந்தியா கிடையாதா? இந்த வஞ்சனையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
இந்திரா காந்தியும் பாகிஸ்தானோடு போர் நடத்தினார். அதில் இமாலய வெற்றி நமக்கு கிடைத்தது. அண்மையில் பாகிஸ்தானோடு நாம் 4 நாள் போர் நடத்தினோம். இதில் அமெரிக்க ஜனாதிபதி 21 முறை சொல்லி இருக்கிறார். நான் தான் போரை நிறுத்தினேன் என்று. அதை மறுப்பதற்கு கூட திராணி கிடையாது மத்திய அரசுக்கு. டிரம்பை மறுத்து பேசக்கூடிய அளவிற்கு இந்த அரசுக்கு திறமையோ, தைரியமோ இல்லை” என்று அவர் தெரிவித்தார்.