ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
மேலும், "திருப்பாச்சி, குத்து, ஜோர், பரமசிவன், ஏய், கோ, சகுனி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட கோட்டா சீனிவாச ராவ், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது. அதன் பின் கடுமையான உடல் நல பாதிப்பால் அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இதற்கிடையில், பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ், கடந்த மாதம் கோட்டா சீனிவாச ராவ் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம்விசாரித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பந்த்லா கணேஷ். அதில், கோட்டா சீனிவாச ராவ் மிகவும் உடல் மெலிந்த நிலையில் அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார்.
இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் கோட்டா சீனிவாச ராவின் இந்த நிலை மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அவர் மீண்டும் நல்ல உடல்நலம் பெற்று படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகரக்ளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.