இந்தியா

என் காதலே உங்க கையில தான் இருக்கு.. 10-ஆம் வகுப்பு மாணவன் வைத்த விநோத கோரிக்கை

கர்நாடகாவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு உள்ளனர்.

என் காதலே உங்க கையில தான் இருக்கு.. 10-ஆம் வகுப்பு  மாணவன் வைத்த விநோத கோரிக்கை
என் காதலே உங்க கையில தான் இருக்கு.. 10-ஆம் வகுப்பு மாணவன் வைத்த விநோத கோரிக்கை
கர்நாடக மாநிலம் பெலகாவில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக மதிப்பீட்டாளர்களிடம் நூதன முறையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

என் காதலுக்கு உதவுகள் என்பது முதல் 500 ரூபாய் டீ குடிக்க வைத்துக் கொள்ளுங்கள் என்பது வரை பல்வேறு விநோத யுக்திகளை கையாண்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மாணவர் ஒருவர் தான் தேர்வு எழுதிய பேப்பரின் ஒரு பக்கத்தில் “நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைத்தால் தான் நான் என் காதலை தொடர முடியும்” என்று எழுதியுள்ளார்.

மற்றொரு மாணவர் தனது தேர்வு தாளுடன் 500 ரூபாயை இணைத்து, “என்னை தேர்ச்சி பெற செய்யுங்கள். என் காதல் உங்கள் கையில் தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், இதேபோன்று தேர்வு தாளுடன் 500 ரூபாயை இணைத்து "டீ குடிக்க வைத்துக் கொள்ளுங்கள். என்னை தேர்ச்சி பெற செய்யுங்கள்” என்றும் மற்றொருவர், என்னை தேர்ச்சி பெற வைத்தால் பணம் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் மதிப்பீட்டாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.