இந்தியா

வெளியூர் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தாஜ்மஹால் முன் நின்ற மனைவியால் பரபரப்பு

உத்திரப்பிரதேசத்தில் கணவர் வீட்டில் இல்லாத போது மனைவி வேறொரு ஆணுடன் ஓடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியூர் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தாஜ்மஹால் முன் நின்ற மனைவியால் பரபரப்பு
வெளியூர் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தாஜ்மஹால் முன் நின்ற மனைவியால் பரபரப்பு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஷாகிர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 40 வயதான அவருக்கு அஞ்சும் என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு கடந்த 15-ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.

அப்போது தனது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் விசாரித்த போது அஞ்சும் தனது மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த ஷாகிர் தனது மனைவியையும் குழந்தைகளையும் பல இடங்களில் தேடியுள்ளார். அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில், ஷாகிரின் உறவினர் ஒருவர் அவருக்கு வாட் அப்பில் (Whatsapp) வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் ஷாகிரின் மனைவி அஞ்சும் தாஜ்மஹால் முன்பு வேறொரு ஆணுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி, அஞ்சும் அந்த நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் ஷாகிர் இல்லாத நேரத்தில் இருவரும் ஓடிச் செல்ல முடிவெடுத்து சென்றதாக தெரிகிறது என்று கூறியுள்ளார். அஞ்சுமையும் அவருடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.