நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என்ன மாதிரியான முறைகேடுகள் நடைப்பெற்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். ராகுல் காந்தி கூறுகையில், “கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவை இடங்கள் உள்ளன. இதில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்த்தது, ஆனால் 9 இடங்களில் மட்டுமே வென்றது. குறிப்பாக பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அந்தத் தொகுதியில் 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்ததைப் பார்க்கும்போது வாக்கு வித்தியாசமானது மிகக் குறைவு. வெற்றி பெற்ற பாஜகவின் பிசி மோகன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலி கான் இருவரும் தலா 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். அவர்களுக்கு இடையேயான வித்தியாசம் வெறும் 2.58% வாக்குகள் மட்டுமே.
பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியானது 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 7 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய நிலையில், மஹ்தேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பாஜக 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.
இதில் சந்தேகம் இருப்பதாக கருதிய நிலையில், நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். மஹ்தேவபுராவில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டத்தை நாங்கள் கண்டறிந்தோம். 5 வகையாக போலி வாக்காளர்களை பட்டியலிட்டுள்ளோம்.
-->11,965 போலி வாக்காளர்கள் ( உதாரணத்திற்கு: ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளில் இடம்பெற்று உள்ளது)
-->40,009 வாக்காளர்களின் முகவரியானது போலி மற்றும் செல்லாத முகவரிகள். (பல்வேறு வாக்காளர்களுக்கு முகவரி எண்: 0 என உள்ளது)
-->10,452 ஒரே முகவரியினை கொண்ட வாக்காளர்கள் (உதாரணத்திற்கு, ஒரு வீட்டு எண்ணில் 80 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது)
-->செல்லாத புகைப்படங்களை கொண்ட வாக்களர்களின் எண்ணிக்கை 4,132.
-->புதிய வாக்காளர் சேர்க்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் படிவம் 6 ஐ தவறாகப் பயன்படுத்தி 33,692 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என” ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகவினை போன்று “மகாராஷ்டிராவில், வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில் எந்த வாக்குச் சாவடிகளிலும் அதிகம் கூட்டம் இல்லை. ஆனால் இறுதியில் அதிக வாக்குகள் பதிவானதாக EC சொல்கிறது. வாக்குச் சாவடிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவிகளை கேட்டபோது ஆணையம் தர மறுத்துவிட்டது” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து கையொப்பமிட்ட பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும் காங்கிரஸ் ஏன் புகார் அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கெனவே எதிர்கட்சிகள் பீகார் மாநில சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.