பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா தங்களது கடுமையான எச்சரிக்கையை விடுத்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, வாகா எல்லையை மூடியது என பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவிற்காக பாகிஸ்தான் தூதர் , இந்தியா மீது முழு அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும், அவ்வாறு இந்தியா தாக்குதல் நடத்தினால், தங்கள் முழு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து 10வது நாளாக எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதனிடையே இந்தியாவில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்குள் இந்திய கப்பல்கள் நுழைய பாகிஸ்தானும் தடை விதித்துள்ளது.