விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நீதிமன்ற வளாகத்திற்குள், தனது 7 வயது மகள் கண்முன்னே, லாரி ஓட்டுநர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியால் பிரிந்த வாழ்க்கை - விவாகரத்து வழக்கு
பெல்வா கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சந்தோஷ் யாதவ் (39) என்பவருக்கும், லட்சுமி (35) என்பவருக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். சந்தோஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவி லட்சுமியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் சந்தோஷை விட்டுப் பிரிந்த லட்சுமி, தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் லட்சுமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீதிமன்ற வளாகத்தில் அரங்கேறிய கொடூரம்
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லட்சுமி தனது மகளுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். சந்தோஷும் அங்கு வந்திருந்தார். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மகள் கண்முன்னே மனைவி லட்சுமியை சரமாரியாகக் குத்தினார். லட்சுமியின் முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதால், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
சிறுமி அளித்த வாக்குமூலம் - மரணம்
இதனைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் லட்சுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இரண்டு மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். "அப்பா கத்தியை மறைத்து வைத்திருந்தார். அவர் முதலில் அம்மாவின் முகத்திலும், பின்னர் வயிற்றிலும் குத்தினார்" என்று இந்த கோரச் சம்பவத்தைக் கண்ட சிறுமி போலீசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கணவர் கைது - தொடரும் விசாரணை
லட்சுமியைக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற சந்தோஷை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சந்தோஷைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவாகரத்து கேட்ட மனைவியை லாரி ஓட்டுநர் நீதிமன்ற வளாகத்திலேயே, தனது மகள் கண்முன்னே குத்திக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சுமியின் தம்பி, சந்தோஷ் இதற்கு முன்பு பலமுறை தனது சகோதரியைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.