18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இன்று மார்ச் (30ம் தேதி ) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சிஎஸ்கே vs ராஜஸ்தான்
இதில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
Read more : SRH vs DC: ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபாரம்
இதைத்தொடர்ந்து அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு 11வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியுள்ளன.
183 ரன்கள் இலக்கு
இரு அணிகளுக்கும் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.