தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா ‘இசைஞானி’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இசைத்துறையில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இவர் சமீபத்தில் 35 நாட்களில் சிம்பொனி இசையை உருவாக்கி முடித்ததாக கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
‘வேலியண்ட்’ (Valiant) என பெயரிடப்பட்ட இந்த சிம்பொனி இசையை மார்ச் 8-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜா அரங்கேற்றினார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்த இளையராஜாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இப்படி பல சாதனைகளை படைத்து வரும் இளையராஜா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்தும் வருகிறார். இதன் ஒருபகுதியாக
கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவின் ’ராஜாவின் இசை ராஜாங்கம்’ எனும் நேரடி இசை நிகழ்ச்சி வரும் மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா இன்று ராயனூர் ஆச்சிமங்களத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழா ஏற்பாட்டாளர் அஜித்குமார் மற்றும் விளம்பரதாரர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஜித், “இளையராஜா, மேஸ்ட்ரோ இசை நிகழ்ச்சிக்குப் பிறகு முதன் முறையாக கரூரில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இன்று மேடை அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இங்கு 30 ஆயிரம் இசை ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும், அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர்” என்று கூறினார்.