ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சம் பாளையத்தில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா சிறப்பு வேண்டுதல், வழிபாடுகளுடன் நடப்பது வழக்கம். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் செல்லியாண்டி அம்மனுக்கு தீர்த்தக்குடம் பவனி கூடுதுறையிலிருந்து எடுத்துவரப்பட்டது.
இந்த தீர்த்த குடத்தை பக்தர்களின் வேண்டுதல் ஏலமாக 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவர் எடுத்திருந்தார். இந்த தீர்த்த குடத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட தண்ணீரைக் கொண்டு செல்லியாண்டி அம்மன் குண்டம் திருவிழாவிற்கு முன்பு உடைத்த தேங்காயில் பச்சை தண்ணீரை ஊற்றி திரி வைத்து விளக்கேற்றினர். அதன் பின்பு மூன்று நாட்கள் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
30 அடி நீளம் உள்ள வாய் அலகுகள், முதுகில் அலகு குத்திக் கொண்டும், குழந்தைகளை ஆண்கள் எடுத்துக்கொண்டும் முழுகுண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் அந்தியூர் செம்புளிச்சாம் பாளையம் பகுதி ஆண்கள் மட்டுமே குண்டம் இறங்கினர். 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் போது வேடிக்கை பார்க்க வந்த பக்தர்கள் கைதட்டி தங்கள் ஆரவாரங்களை தெரிவித்தனர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.