சினிமா

பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் 'டியூட்'.. 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படத்தின் 4 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் 'டியூட்'.. 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Dude movie
நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட்' (Dude) திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த காதல் கலந்த நகைச்சுவைப் படம், வெளியான முதல் நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.83 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், நடிப்பிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 18-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள 'டியூட்' திரைப்படம் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி, காதல் மற்றும் ஃபேமிலி என்டர்டெயினராக வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 'டியூட்' திரைப்படம் வெளியான நான்கு நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ.83 கோடி வசூல் செய்துள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசூல், பிரதீப் ரங்கநாதனின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.