கிரிவலம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி.. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் சாமி தரிசனம் செய்தனர்.

Mar 28, 2025 - 09:48
Mar 28, 2025 - 09:51
 0
கிரிவலம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி.. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்
சினேகா-பிரசன்னா

மாதவன் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் சினேகா. தொடர்ந்து, ’ஆனந்தம்’, ‘புன்னகை தேசம்’, ‘வசீகரா’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

'புன்னகை அரசி' என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவர், கமல், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

ரசிகர்களின் ஃபேவரட் பாடல்கள்

'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்', 'ஒவ்வொரு பூக்களுமே’, ‘பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு’ போன்ற பாடல்கள் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. 

நடிகை சினேகா கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்த சினேகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் (Reality Show) நடுவராகவும் உள்ளார்.

கிரிவலம்

இந்நிலையில், நடிகை சினேகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் சென்றுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ தினமான நேற்று சாமி தரிசனம் மேற்கொண்ட நடிகை சினேகா  தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து கிரிவலம் மேற்கொண்டார்.

14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவல பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம்,  வாயு லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும்,  திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட அனைத்து திருக்கோயிலிலும் தரிசனம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி கிரிவலப் பாதையில் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.

இரவு நேரத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட திரைப்பிரபலங்களை கண்ட பக்தர்கள் அவர்களுடன் செல்பி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow