K U M U D A M   N E W S

spiritual

சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி மாதம்.. வேப்ப மரம் பூமியில் உருவான புராண கதை தெரியுமா?

மதுரை: தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். சூரியன் நான்காவது ராசியான கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகைகள் களைகட்டும். ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில்களில் வேப்ப இலைகள் தோராணங்கள் நிறைந்திருக்கும்.ஆடி என்பது எப்படி வந்தது என்று புராண கதை ஒன்று சொல்கிறார்கள்.

ஆடி அமாவாசை.. ஆடி பூரம்.. குரு பூர்ணிமா.. ஆடி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்

மதுரை: பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 வரை உள்ளது.

குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்..தரிசனம் செய்ய குடும்பத்தோடு ரத்தினமங்கலம் வாங்க

ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு நாளை 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி.. எந்த நாட்களில் என்ன அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.