K U M U D A M   N E W S

Police

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது.. போலீஸ் அதிரடி!

Armstrong Assassination Case in Tamil Nadu : வழக்கறிஞர் சிவா மூலம் கொலைக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

'என்கவுன்ட்டர்'.. அழுது புலம்பிய ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளிகள்.. போலீசுக்கு நீதிபதி எச்சரிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு (எ) வினோத், அருள் மற்றும் ஹரிஹரனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர்கள் திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது போல தங்களையும் என்கவுன்ட்டர் செய்ய உள்ளதாக நீதிபதி ஜெகதீசனிடம் கூறியுள்ளனர்.

Armstrong: ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு காரணம் தான் என்ன..? தோண்டத் தோண்ட புதுப்புது ரவுடிகள்! Exclusive

Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பகையில் இருந்த ரவுடிகளின் பட்டியலை போலீஸார் முழுமையாக தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ஆற்காடு சுரேஷ் தம்பி உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் விசாரணை

Armstrong Murder Case : குற்றவாளிகளை ரகசியமான இடங்களிலும், கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

100 கோடி நில மோசடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தை .. இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி அதிரடி!

எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

அதிரடி காட்டும் சென்னை போலீஸ்.. 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது...

புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

போய் அள்ள சொல்லுடா... மணல் கொள்ளைக்கு துணை போன ஆய்வாளர் சஸ்பெண்ட்?

புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... புதிய சிசிடிவி காட்சி வெளியீடு... எதிர்க்கட்சி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி?

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் முதல் சிசிடிவி காட்சிகள் முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களும் வேறு மாதிரி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்டர்.. போலீஸ் அதிரடி... நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை திரட்டியதும், அவரை எங்கு வெட்டினால் உடனே இறப்பார்? என்ற திட்டங்களை தீட்டியதுடன், அதிக இடங்களில் ஆம்ஸ்ட்ராங்கை இவர் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு "ஸ்கெட்ச்" போட்டது இவர்தான்.. போலீசார் அதிர்ச்சி தகவல்...

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.

போலீஸ் உருவாக்கிய கதை.. திமுகவால் தீட்டப்பட்ட கதை - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'... போலீசுக்கு சீமான் சவால்... சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம்!

''கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கொலை செய்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது''

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்களிக்க 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சவுக்கு சங்கருக்கு 4 நாள் போலீஸ் காவல் - பண மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு மருந்து மாத்திரைகள் கூட தராமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கே 10 லட்சம்... இவர் குடும்பத்துக்கு 25 லட்சம் கொடுங்க -கோபி நயினார்

''ராஜ்குமார் உயிரிழப்புக்கு காரணமான வட்டாட்சியர் பிரீத்தியை கைது செய்தனர். பிரீத்தியை இடமாற்றம் செய்தததால் தமிழ்நாடு அரசு அவரை பாதுகாக்கிறது என்பதுதான் அர்த்தம்''

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.... வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்... தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.