விஷ்ணு புகார்
தவெக ஆதரவாளரும், யூடியூபருமான விஷ்ணு பெண் ஒருவரிடம் தவறாக பேசியதாக பெண்ணின் அண்ணன் குடும்பத்தினர் இணைந்து தாக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக யூடியூபர் விஷ்ணு நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு கோடி பணம் கேட்டு தன்னை மிரட்டி தாக்கி இதுபோன்ற பேச வைத்ததாக காயத்ரி, ரகுநாத், சந்தோஷ் ஆகியோர் மீது புகார் அளித்தார்.
இந்நிலையில் யூடியூபர் விஷ்ணு தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்ததாக விஷ்ணு மீது ரகுநாத், சந்தோஷ், காயத்ரி புகார் அளித்தனர்.
பல பெண்களுடன் தொடர்பு
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ் மற்றும் காயத்ரி, “நண்பர் ஒருவர் மூலமாக யூடியூபர் விஷ்ணு பிஸ்னஸ் சம்மந்தமாக பழக்கம் ஏற்பட்டதாகவும், அன்றைய தினம் போரக்ஸ் ஸ்கேமில் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறி மதுவுடன் தங்களது அறைக்கு வந்ததாகவும், பின்னர் தங்களது தங்கையிடம் ஏன் தவறாக பேசினாய் என விஷ்ணுவிடம் கேட்டப்போது தரக்குறைவாக பேசியதால், நாங்கள் விஷ்ணுவின் போனை பறித்து பார்த்தபோது இதேபோல பல பெண்களுடன் விஷ்ணு ஆபாசமாக பேசி இருப்பது தெரியவந்தது. அவரது வாயிலே உண்மையை வரவழைக்க தாக்கி வீடியோ எடுத்ததாகவும்” அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த சமயத்தில் நடந்த தகவலை விஷ்ணுவின் மனைவி அஸ்மிதாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டபோது, வீடியோக்களை போலீஸிடம் அனுப்பவேண்டாம் எனவும் தான் கர்ப்பமாக இருப்பதாலும், விவாகரத்து போன்ற பிரச்னை நிலவி வருவதால் அதை பயன்படுத்தி கொள்வதாக கூறி விஷ்ணுவின் மனைவி தெரிவித்து செல்போனை தங்களிடம் இருந்து வாங்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
வீடியோவை வெளியிட்டது மனைவி
அதன் பின்னர் அவரது மனைவி விஷ்ணுவின் இன்ஸ்டாகிராம் ஐடியை கைப்பற்றி, தாங்கள் ரெக்கார்டு செய்த அந்த வீடியோவை பதிவிட்டு இருப்பதாகவும், தாங்கள் வீடியோ எடுத்து கொடுத்தது தவறு தான் என ஒப்புக்கொண்டனர். விஷ்ணுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து தொடர்பான பிரச்னைகள் தங்களுக்கு தெரியாது எனவும் அவரது செல்போன் மூலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது.அனைத்துமே அவரது மனைவி தான் என திருப்பம் ஏற்படுத்தும் வகையில் தெரிவித்தனர்.
ஆணுறையையும் விஷ்ணு தான் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், விஷ்ணு அவரது மனைவி மீது பெங்களூருவில் போரக்ஸ் ஸ்கேமில் 70 லட்சம் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், பெங்களூருவில் பெயில் பெட்டிஷன் போட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக எங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் யூடியூபர் விஷ்ணு செயல்படுவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் தாங்கள் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தனர்.