இளம்பெண் தற்கொலை
தஞ்சை மாவட்டம், நடுக்காவேரி அரச மரத்தெருவை சேர்ந்த தினேஷ் என்பவரை கடந்த 8ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவர் அளித்த புகாரின்பேரில் நடுக்காவேரி காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.இதனை அறிந்த தினேஷ் சகோதரிகளான மேனகா மற்றும் கீர்த்திகா நடுக்காவேரி காவல் நிலையம் சென்று தனது தம்பியை விடுவிக்குமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஷர்மிளா சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறி காவல் நிலையம் வாயில் முன்பு சகோதரிகளான மேனகா மற்றும் கீர்த்திகா இருவரும் விஷம் அருந்தியுள்ளனர்.இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 9ம் தேதி கீர்த்திகா உயிரிழந்தார்.
உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு
இதனை அடுத்து சாதி பெயரை சொல்லி திட்டிய காவல் ஆய்வாளர் ஷர்மிளா மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து வந்தனர்.
அதே வேளையில் காவல் ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா கீர்த்திகா உறவினர்களிடம் சமரச பேச்சு நடத்தினார்.இதனை தொடர்ந்து கீர்த்திகா உடல்கூராய்வு செய்யப்பட்டது.ஆனால் திடீரென உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் மீண்டும் பிணவறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கீர்த்திகா சகோதரி துர்கா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
உடல் ஒப்படைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி தனபால் சுமூகமாக பேசி உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை என்றால் காவல்துறையினர் சட்டப்படி அடக்கம் செய்யலாம் என உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் உறவினர்கள் கீர்த்திகா உடலை வாங்க ஒப்புக்கொண்டு அவரது சகோதரர் தினேஷ் படிவத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் கீர்த்திகா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சொந்த ஊரான நடுக்காவேரியில் அடக்கம் செய்ய எடுத்துச்சென்றனர். வழியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புக்கு பின் தொடர்ந்து சென்றனர்.