உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
விசிக அழைத்து அதிமுக சென்றால் மது ஒழிப்பு கொள்கைக்கு எதிரான வகையில், அது நல்லதுதான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
Mahavishnu case update: அசோக் நகர் பள்ளியின் மேலாண்மை குழுவை சேர்ந்த காமாட்சி என்பவர் மூலமாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.
மருத்துவமனைகளில் ICU-வை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என குரங்கமை எதிரொலியால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
Actor Vijay Movie The GOAT Box Office Collection Report in Tamil : விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை முதலில் விடுதலை செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பஜ்ரங் புனியாவுக்கு கட்சியில் விவசாயிகள் பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.