மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, தற்போது வருடத்திற்கு அதிகளவிலான டி20 போட்டிகளை நடைப்பெறுகிறது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடுகையில். சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரிமீயர் லீக் போட்டிகளும் நடைப்பெற்று வருகிறது.
13,569 ரன்கள்.. 4 வது இடத்திற்கு முன்னேற்றம்:
இந்நிலையில் தான் டி20 கிரிக்கெட்காகவே பிரத்யேகமாக செதுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கு பொல்லார்ட், விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.
அது என்ன சாதனை என்றால், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி, நான்காவது இடத்திற்கு முன்னேறி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார் பொல்லார்ட். சமீபத்தில் நடைபெற்ற எம்ஐ நியூயார்க் (MI New York) மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (Texas Super Kings) அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) போட்டியில், பொல்லார்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம், ஒட்டுமொத்தமாக 696 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட், இதுவரை 13,569 ரன்களை எடுத்துள்ளார். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு-
1.கிறிஸ் கெயில் - 14,562 ரன்கள் (463 போட்டிகள்)
2. அலெக்ஸ் ஹெல்ஸ்- 13,704 ரன்கள் (497 போட்டிகள்)
3. ஷோயப் மாலிக்- 13,571 ரன்கள் (557 போட்டிகள்)
4. கிரன் பொல்லார்ட்- 13,569 ரன்கள் (696 போட்டிகள்)
5. விராட் கோலி- 13,543 ரன்கள் (414 போட்டிகள்)
விராட் கோலி ஐபிஎல் தவிர்த்து மற்ற டி20 பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடுவதில்லை. டெத் ஓவர்களில் களமிறங்கும் ஆல்ரவுண்டரான கீரண் பொல்லார்ட், உலகெங்கிலும் உள்ள பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL), பிக் பாஷ் லீக் (BBL), கரீபியன் பிரீமியர் லீக் (CPL) மற்றும் இப்போது மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார். அவரது ஆல்ரவுண்டர் திறமை, குறிப்பாக மிடில் ஆர்டரில் வந்து பந்துகளை சிக்சர்களுக்கு பறக்கவிடும் திறனும், முக்கியமான சமயங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் இந்த டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக அவர் திகழ்கிறார்.
டாப் 5 பட்டியிலில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஷோயப் மாலிக்கை விட, இன்னும் வெறும் 3 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார் பொல்லார்ட். தற்போது நடைப்பெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் முடிவதற்குள்ளாகவே அனைத்து வகையான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் டாப் 3 பட்டியலில் பொல்லார்ட் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.