K U M U D A M   N E W S

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

Dana Puyal Update : தீவிர புயலாக உருவெடுக்கும் ”டானா”பாதிப்பு யாருக்கு?

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் சீட்டு கட்டு போல் சரிந்த கட்டிடம்.. கட்டிட உரிமையாளர் மகனை கைது செய்த போலீஸ்

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட உரிமையாளரின் மகன், காண்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

“அரசு எந்த உதவியும் செய்யல..” எம்எல்ஏ கோ.தளபதியை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.

சுற்றுலாப் பயணிகளே அங்க மட்டும் போகாதீங்க..! - வனத்துறை விதித்த அதிரடி தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.

#JUSTIN: கொட்டி தீர்த்த கனமழை.. பெங்களூருவில் தத்தளிக்கும் மக்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள். சாலைகளில் வாகனங்களே இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் மக்கள் மீட்பு

நாளை உருவாகும் புயல்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்.. சேலத்தில் மக்கள் அவதி

சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கொட்டித் தீர்த்த கனமழை.. ஜவ்வாதுமலையில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

முடங்கிய பெங்களூர்.. பேய் ஆட்டம் ஆடிய மழை

பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மூழ்கின. குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்... வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குளம்போல் தேங்கிய மழைநீர்... "கால் வைக்கவே முடியல.." மதுரையில் கடுப்பான மக்கள்

கனமழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கொட்டித் தீர்த்த மழை.. வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. வெளியே வர முடியாமல் தவித்த மக்கள்

தேனி மாவட்டம் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.

"எல்லாத்துக்கும் காரணம் அது மட்டும் தான்"- பழநியில் கண் கலங்கி நிற்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ரோடா..? கடலா..? முடங்கிய முக்கிய சாலை.. மிதக்கும் வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

காட்டாற்று வெள்ளம்.. 'வேண்டாம்' பறந்த முக்கிய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

#JUSTIN || பெங்களூரை திக்குமுக்காட வைக்கும் கனமழை - கதி கலங்கிய மக்கள்

பெங்களூருவில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

#JUSTIN || வேகமான கடல் அலை.. ரெடியான மேகம்..கனமழை To மிக மிக கனமழை கன்பார்ம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

இரவில் மிரளும் சென்னை மக்கள்.. பயத்தை காட்டும் கனமழை ஏன் தெரியுமா..?

சென்னையில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை. காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் மழை.

மீண்டும் உருவாகும் 'ஆபத்து' - இதுவரை இல்லாத அளவுக்கு "வார்னிங்"

தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.