கொட்டி தீர்த்த கனமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியே வெளியே செல்வதற்கே அச்சப்படும் அளவிற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
எப்போ தான் மழை பெய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது.இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பலத்த மழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது.
கடந்த ஒருவார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.